.webp)
-560494.jpg)
COLOMBO (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையினால் 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காலி - நாகொட,
களுத்துறை - பாலிந்த நுவர, கேகாலை - தெரணியகல, கண்டி - பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இரத்தினபுரி - குருவிட்ட, நிவித்திகலை, பெல்மடுல்ல, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்மேடு சரிதல், கற்பாறைகள் சரிதல், மரங்கள் முறிந்து விழுதல், நிலம் தாழிறங்குதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அதிக மழையினால் மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதினால், பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறு மட்டத்தில் வௌ்ள அபாயம் காணப்படுவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த பகுதிகளில் ஆற்றின் இருமருங்கிலும் உள்ள மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
