22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில்

22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

by Staff Writer 19-09-2026 | 10:08 AM

COLOMBO (News 1st)

22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரினால் எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.
அரசியலமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான நடைமுறையினை பின்பற்றி அரசாங்கத்தினால் 22 ஆவது திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 
22 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், அதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுசில் ரணசிங்க கூறினார்.  22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியன எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழு தீர்மானித்திருந்தது. 
பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய குழு அண்மையில் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.