அதிவேக வீதிகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி.

ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக வீதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை

by Staff Writer 20-09-2026 | 8:12 AM

COLOMBO (News 1st) ஆசனப் பட்டி அணியாமல் அதிவேக வீதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட இன்றைய (20) தினமும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர், அதிவேக வீதிகளில் ஆசனப் பட்டி அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்து பயணிகளும் ஆசன பட்டி அணியும் நடைமுறை நேற்று (19) முதல் கட்டாயமாக்கப்பட்​டுள்ளது.

வாகன உற்பத்தியின் போது ஆசன பட்டிகள் அற்ற வாகனங்களில் அவற்றை பொருத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் நேற்று முன்தினத்துடன் (18) நிறைவடைந்த நிலையில் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.