.webp)
-556327.jpg)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று(20) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சியை கைப்பற்றி ஒருவார காலத்திற்குள் அவருக்கு பிணை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என இவர்கள் இதன்போது தெரிவித்திருந்தமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் அசாத் மௌலானாவிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த தகவல்களை நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரான்ஸில் வசிக்கும் அசாத் மௌலானாவிடம் பிரான்ஸ் தூதரகத்தில் விசாரணை அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
