COLOMBO (News 1st)
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப்பட்டிகளை அணிவது நேற்று (18) நள்ளிரவு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வாகன உற்பத்தியின் போது ஆசனப் பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் நேற்றுடன் நிறைவடைவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
ஆசனப் பட்டி தொடர்பான சட்டத்தை மீறும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக இன்று (19) முதல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாளாந்தம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், காயங்கள் ஏற்படுவதால் உருவாகும் பாரதூரமான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும், அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து ஆசனங்களிலும் பயணிக்கும் நபர்கள் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.