கடற்கரை தூய்மைப்படுத்தல் வாரம் இன்று ஆரம்பம்

கடற்கரை தூய்மைப்படுத்தல் வாரம் இன்று ஆரம்பம்

by Staff Writer 19-09-2026 | 12:41 PM

COLOMBO (News 1st) 

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும். (19)
இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து கடற்கரைகளையும் உள்ளடக்கும் வகையில் கடற்கரை தூய்மைப்படுத்தல் வாரம் இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின் இறுதி நாளான எதிர்வரும் 23 ஆம் திகதி எல்நினோ நிலைமை, காலநிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்புணர்வூட்டுவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 
கடற்கரைகளை அசுத்தப்படுத்தும் நபர்களுக்கு எதிராகவும், கடலுக்கு அசுத்தமான நீரை வௌியேற்றுபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
அரச நிறுவனங்கள், முப்படையினர், சூழலியல் அமைப்புக்களுடன் இணைந்து பொதுமக்களும் கடற்கரை மற்றும் சமுத்திரச் சூழலைப் பாதுகாப்பது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.