COLOMBO (News 1st)
திருகோணமலை நகர் பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பணத்தை திருடிச் செல்வதற்கு முற்பட்ட சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபான விற்பனை நிலையத்திற்கு நேற்றிரவு 9.30 இற்கு வருகைத்தந்த இருவர் டி56 ரக துப்பாக்கியினால் கூரையை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, பணத்தை திருடிச் செல்வதற்கு முற்பட்டுள்ளனர்.
இதன்போது, மதுபான விற்பனை நிலையத்திலுள்ள ஊழியர் ஒருவருக்கும் திருடர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து திருடப்பட்ட பணமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.