முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலீ லங்காபுரவுக்கு அறிவித்துள்ளது.முன்னாள் அமைச்சரினால் நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பில் வௌியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் கடந்த 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.குறித்த ஊடக சந்திப்பில் இ...