Colombo (News 1st) நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றுவதற்கான சவால் தம்முன் காணப்படுவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கிறார்.
நாரஹேன்பிட்டியிலுள்ள 'நில மெதுர' கட்டடத்தில் இன்று(20) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.