Colombo (News 1st) கொழும்பு பங்குச்சந்தையில் பங்குச் சுட்டெண் இன்று(20) குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது.
இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 156.44 புள்ளிகளால் உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் கொழும்பு பங்குச் சந்தை தொடர்ச்சியாக உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளமை, சுற்றுலாத்துறையின் புத்துயிர், வாகனச் சந்தை மீள் திறப்பு போன்ற பல காரணிகளால் முதலீட்டு நம்பிக்கை அதிகரித்திருப்பதால் இந்த வளர்ச்சி காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.