IMF தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளரின் செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் குழுக் கூட்டத்தை எதிர்வரும் மாதங்களில் நடத்த எதிர்பார்ப்பு - ஜூலி கொசேக்

by Staff Writer 20-12-2024 | 9:44 PM

Colombo (News 1st) இலங்கைக்கு அடுத்து வழங்கப்பட வேண்டிய கடன் வசதியின் பங்கு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமது நிறைவேற்று குழுக் கூட்டத்தை எதிர்வரும் மாதங்களில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஊடக சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சர்வதேச நாணய நிதிய தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜூலி கொசேக் இதனைக் கூறினார்.