இலங்கை கிரிக்கெட் குழாம் நியூஸிலாந்து நோக்கி பயணம்

இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் குழாம் நியூஸிலாந்து நோக்கி பயணம்

by Staff Writer 20-12-2024 | 9:51 PM

Colombo (News 1st) இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் குழாம் இன்று(20) இரவு நியூஸிலாந்து நோக்கி பயணிக்கின்றது.

சரித் அசலங்க தலைமையிலான  இலங்கை குழாத்தில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

3 போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் சர்வதேச ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளன.