Colombo (News 1st) நவம்பர் மாத இறுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணித்தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 10.4 வீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணித்தொகை 5961.6 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.