சிரேஷ்ட ஊடகவியலாளர் P.மாணிக்கவாசகம் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் P.மாணிக்கவாசகம் காலமானார்

by Bella Dalima 12-04-2023 | 4:21 PM

Colombo (News 1st) வன்னி பிராந்திய சிரேஷ்ட ஊடகவியலாளர் P.மாணிக்கவாசகம் இன்று காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்னார்,  தனது  76  ஆவது வயதில்  இன்று காலமானார்.

சுமார் 04 தசாப்த ஊடக அனுபவத்தைக் கொண்டுள்ள P.மாணிக்கவாசகம், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களுக்காக பணியாற்றியுள்ளார்.

அன்னாரின் பூதவுடல் வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை 13 ஆம் திகதி காலை இறுதிக்கிரியைகள் நடத்தப்படவுள்ளன.