துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர் கைது

காத்தான்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடியவர் கைது

by Bella Dalima 15-06-2024 | 3:38 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு - காத்தான்குடியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டில் இருந்த போது, அடையாளந்தெரியாத சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு, அவரிடமிருந்த தங்க நகைகள் மற்றும் 20 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளார்.

32 வயதான பெண் ஒருவரே காயமடைந்ததுடன், அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

43 வயதான சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.