கொழும்பு,களுத்துறை மக்களுக்கு நீர் விநியோக திட்டம்

கொழும்பு, களுத்துறை மக்களுக்காக 'களு கங்கை நீர் விநியோகத் திட்டம்'

by Staff Writer 17-09-2026 | 9:10 AM

Colombo (News 1st) கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களிலுள்ள 05 இலட்சம் குடும்பங்களுக்கு நீர் விநியோகிப்பதற்காக, புதிய நீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு இதனை தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது சிக்கல்களை எதிர்கொண்டுள்ள 25,000 குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'களு கங்கை நீர் விநியோகத் திட்டம்' எனும் பெயரின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அத்துடன், 73 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த களு கங்கை நீர் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க மேலும் தெரிவித்தார்.