.webp)

Colombo (News 1st) தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் நோய் நிலைமை தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்காதமைக்கான காரணத்தை முன்வைப்பதற்காக எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பிலும் தொடர்ந்தும் அவர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமா, இல்லையா? என்பது தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் செயற்படாமையே அதற்கான காரணமாகும்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 02ஆம் திகதி, கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
