மூவர் பலியான மட்டக்குளி கோர விபத்து

மூவர் பலியான மட்டக்குளி கோர விபத்து

by Staff Writer 17-09-2026 | 7:33 AM

Colombo (News 1st) கொழும்பு - மட்டக்குளி, ஃபர்கியூஷன் சந்தியில் நேற்றிரவு(16) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார், 02 முச்சக்கரவண்டிகள், 02 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய 52 வயதுடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.