மருத்துவ பீட வசதிகளை மேம்படுத்த வேலைத்திட்டம்..

மருத்துவ பீடங்களின் வசதிகளை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம்..

by Staff Writer 29-08-2025 | 4:55 PM

பல்கலைக்கழக மருத்துவ பீடங்களின் வசதிகளை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

சப்ரகமுவ, மொரட்டுவ, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனெவிரத்ன தெரிவித்தார்.  

நாட்டில் தற்போது 12 மருத்துவ பீடங்கள் செயற்படுகின்றன.

இவற்றில் வருடாந்தம் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.