.webp)
முதலீட்டுக்கான அரச காணிகளை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலக மட்டத்தில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீரஆரச்சி தெரிவித்தார்.
குறித்த காணிகளை முதலீட்டாளர்களின் தேவைக்கேற்ப விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
மகாவலி வலயங்களின் 5,300 ஹெக்டேயர் காணியை முதலீட்டுக்காக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.M.J.K ஹேரத் குறிப்பிட்டார்.