செம்மணி மனித புதைகுழியில் 08 மனித என்பு தொகுதி..

செம்மணி மனித புதைகுழியில் புதிதாக 08 மனித என்பு தொகுதிகள் அடையாளம்..

by Staff Writer 29-08-2025 | 4:58 PM

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் புதிதாக 08 மனித என்பு தொகுதிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் 2ஆம்  கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று(28) முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 8 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 06 என்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.