அத்துரலியே ரதன தேரர் விளக்கமறியலில்..

அத்துரலியே ரதன தேரர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்..

by Staff Writer 29-08-2025 | 4:50 PM

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அபே ஜன பலய கட்சிக்கு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது.

அழுத்தம் விடுத்து குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக அபே ஜன பலய கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம  விமலதிஸ்ஸ தேரரைக் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்ததாக அத்துரலியே ரதன தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.