.webp)
அனைத்து அரச நிறுவனங்களிலும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.
ஏற்கனவே பிரதேச செயலக அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களிலும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன குறிப்பிட்டார்.
ஊழியர்களின் வருகை மற்றும் வௌியேறும் நேரங்களை பட்டியலிடுவது இதன் பிரதான நோக்கமாகும்.
இதற்கு மேலதிகமாக கடமைக்கு சமுகமளிப்பதில் காணப்படும் முறைகேடுகளை தடுப்பது இதன் மற்றுமொரு நோக்கம் என அமைச்சர் மேலும் கூறினார்.