.webp)
Colombo (News 1st) வத்தளை, எவரிவத்த பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 01 கிலோ 20 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர் துபாயில் வசிக்கும் 'பரவி சுதா' என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளரென பொலிஸார் தெரிவித்தனர்.