உத்தியோகபூர்வ இல்லங்களை சோதனையிட அனுமதி

நீதித்துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை சோதனையிட தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அனுமதி

by Staff Writer 13-08-2025 | 12:47 PM

Colombo (News 1st) ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு தடவை நீதித்துறை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்களை சோதனையிடுவதற்கு தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக மேல் நீதிமன்ற வளாகங்களில் சோதனைகளை மேற்கொள்ள இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறையாக துப்பரவு செய்யப்படாமையால் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் தகவல் வௌியாகியுள்ளது.

உத்தியோகபூர்வ இல்லங்களை முறையாக பராமரிப்பது அதிகாரிகளின் கடமையென நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.