புதிய ரயில்வே பொதுமுகாமையாளர் நியமனம்

ரயில்வே பொதுமுகாமையாளராக ரவீந்திர பத்மப்பிரிய நியமனம்

by Staff Writer 12-08-2025 | 10:29 PM

Colombo (News 1st) இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தைக் கொண்ட கே.ரவீந்திர பத்மப்பிரிய ரயில்வே பொதுமுகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக, சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் தகவல் தொழில்நுட்பத்துறையின் பணிப்பாளராக அவர் இதற்கு முன்னர் கடமையாற்றியிருந்தார்.