பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்களினால் வெற்றி..

பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்களினால் வெற்றி..

by Staff Writer 14-07-2025 | 6:36 AM

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 83 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

தம்புள்ளையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 07 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணித்தலைவர் லிட்டன் தாஸ் 50 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பினுர பெர்ணான்டோ 03  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

178 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி​ 15.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அணிசார்பில் Pathum Nissanka 32 ஓட்டங்களையும், Dasun Shanaka 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்துவீச்சில் ரிஷாட் ஹூசைன் 03 விக்கெட்டுகளையும், ஷொரிபுல் இஸ்லம், மொஹமட் ஷய்புதீன் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லிட்டன் தாஸ் தெரிவானார்.