நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து துப்பாக்கி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிலிருந்து துப்பாக்கி மீட்பு : விசாரணைக்கு 5 குழுக்கள்

by Chandrasekaram Chandravadani 24-12-2025 | 6:24 PM

Colombo (News 1st) ராகம - குருகுலாவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனையிட்ட போது T-56 ரக துப்பாக்கி, 02 மெகஸின்கள் ஆகியன கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 05 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குருகுலாவத்த, பஹலவத்த பகுதியில் குறித்த கார் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய நேற்றிரவு(23) சோதனைக்குட்படுத்தப்பட்டது.

சந்தேகநபர்கள் காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் 11 கைவிரல் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.