.webp)
-606379-552112.jpg)
Colombo (News 1st) தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியொன்றிற்குள் 2 வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 12 பேரினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 7 ஆண்களும், 3 பெண்களும் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக அதிகளவான கொலை சம்பங்கள் இடம்பெறும் நாடாக தென்னாபிரிக்க பதிவாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை தென்னாபிரிக்காவில் நாளொன்றிற்கு சராசரியாக 63 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகங்களின் ஊடாகவே பெரும்பாலான கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும், சர்வதேசளவில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை கொண்ட நாடாக தென்னாபிரிக்கா காணப்படுகின்றது.
இத்தகைய கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை கொண்ட மற்றுமொரு நாடான அவுஸ்திரேலியாவில் கடந்த 14 ஆம் திகதி இருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
