.webp)
Colombo (News 1st) சீனாவின் உயர்மட்ட தூதுக்குழு இன்று(23) முற்பகல் நாட்டிற்கு வருகை தந்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய நிறைவேற்று குழுவின் உறுப்பினராகவும் ஷீ சங் வலயத்தின் கட்சி செயலாளராகவும் கடமையாற்றும் வேங் ஜுன் ஸெங் (Hon. Mr. Wang Junzheng) தலைமையிலான தூதுக்குழு வருகை தந்துள்ளது.
இலங்கை - சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
