.webp)
-561448.jpg)
Colombo (News 1st) உலகின் விசாலமான ஊடக அமைப்பான ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் உப தலைவராக கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அமைப்பின் 63 வருட கால வரலாற்றில் இலங்கையர் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தில் 66 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
அந்த நாடுகளை சேர்ந்த 225 முன்னணி ஒளிபரப்பு மற்றும் ஊடக நிறுவனங்கள் இந்த சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
தொலைக்காட்சி, வானொலி, டிஜிட்டல் ஊடகத்துறைகளில் உலகின் முன்னணி நிறுவனங்கள் பல இதில் அடங்குகின்றன.
சங்கத்தின் புதிய தலைவராக ஜப்பானின் NHK-இன் யமனா ஹிரோ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி ஒலிபரப்பு நிறுவனமான அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமான ABC Australia, சங்கத்தின் உப தலைவர் பதவிக்கு ஷெவான் டெனியலின் பெயரை முன்மொழிந்தது.
ஜப்பானின் தேசிய ஒலிபரப்பு நிறுவனமான NHK நிறுவனம் அந்தப் பரிந்துரையை உறுதிப்படுத்தியது.
