எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்

by Staff Writer 01-11-2026 | 10:39 PM

COLOMBO (News 1st)  இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவாலும்

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவாலும் 

அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. டீசலின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்

சுப்பர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை என பெற்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.