.webp)
-561407.jpg)
COLOMBO (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 07 மாகாணங்களில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல், தென், சப்ரகமுவ, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலேயே டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்,டொக்டர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுமார் 130 பிரதேச செயலாளர் பிரிவுகளில் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 13 மாவட்டங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டில் 105,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆகக் காணப்படுகின்றது.
எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் படி தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
