.webp)

Colombo (News 1st) எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி செயலாளரும் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளருமான கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவிடம் இலஞ்ச விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
அவரது வீட்டில் வைத்து 4 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதித் தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
