.webp)
-560682.jpg)
COLOMBO (News 1st) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 81ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் தேசிய அறிக்கை இன்று (28) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை தூதுக்குழு அமெரிக்காவின் நியூயோர்கிற்கு நேற்று முன்தினம் சென்றடைந்தது.
கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது கூட்டத்தொடர் இன்று (28) நிறைவடையவுள்ளது.
"நம்பிக்கையை மீட்டெடுத்தல், மாற்றங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அனைவருக்கும் பலனளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை" எனும் தொனிப்பொருளில் இம்முறை கூட்டத் தொடர் நடைபெறுகின்றது.
இலங்கையின் தற்போதைய வெளியுறவு கொள்கை முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், இன்றைய அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஒத்துழைப்பை மேம்படுத்தி கொள்ளும் நோக்கில், பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரிகளுடன் இதன்போது அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
