.webp)

Colombo (News 1st) வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஜப்பான் அரசாங்கம் 148 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Akio Isomata மற்றும் ஸ்கவிடா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தின் முகாமையாளர் சரத் ஜயவர்தன ஆகியோருக்கிடையில் நேற்று(29) கைச்சாத்திடப்பட்டது.
இந்த செயற்றிட்டத்தின் ஊடாக 190,000 சதுர மீட்டருக்கும் அதிக நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
