.webp)

Colombo (News 1st) 31ஆவது ஆசிய தொலைக்காட்சி விருது விழாவில் மகாராஜா ஊடக வலையமைப்பு 4 விசேட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிரச தொலைக்காட்சிக்காக நியூஸ் ஃபெஸ்ட் தயாரித்த 'Save the Sri Lankan Leopard' ஆவணப்படம்
நியூஸ் ஃபெஸ்ட்டின் 'The Unseen Storm - When Systems Fail'
சிறந்த இசை நிகழ்ச்சிக்காக சக்தி TV தயாரிப்பான 'Shakthi Crown' நிகழ்ச்சி
சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஸ்டெய்ன் ஸ்டுடியோஸ் தயாரித்த 'சிரச ரூ ரே' நிகழ்ச்சி ஆகியன பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இது ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்துறையின் சிறப்பான திறமைகளை கௌரவிக்கும் விருது விழாவாகும்.
இந்த விருது விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 13, 14ஆம் திகதிகளில் வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெறவுள்ளது.
