.webp)
-560328.jpg)
COLOMBO (News 1st) கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பஹல கடுகண்ணாவ 96 முதல் 99 கிலோமீற்றர் வரையிலான பகுதி மண்சரிவு அபாயம் மிகுந்த வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தால் தயாரிக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த வலய வரைபடங்கள் மற்றும் அப்பகுதியில் முன்னர் இடம்பெற்ற மண்சரிவுகள் மற்றும் டித்வா புயலை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு நிலைமைகளை கருத்திற்கொண்டு குறித்த பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளை உள்ளடக்கிய வகையில் மண்சரிவு அபாயத்தை குறைக்கும் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக 101 . 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் வெளிநாட்டு கடன் உதவியின் கீழ் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பாக 21.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்குகின்றன.
இந்த திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.
