.webp)
-560275.jpg)
Colombo (News 1st) வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை1,61,451 ஆக உயர்வடைந்துள்ளது.
08 மாவட்டங்களை சேர்ந்த 49,344 குடும்பங்களை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் மொனராகலை மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு 42,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,394 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தில் 37,521 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 12,47 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம், பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,40,32 பேருக்கு குடிநீரை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.
