இந்த ஆண்டில் 37 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

நாடு முழுவதும் இந்த ஆண்டில் 37 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்

by Staff Writer 12-09-2026 | 7:58 AM

Colombo (News 1st) இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 37 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்  பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றில் 32 சம்பவங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களிடையே இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு  குறிப்பிட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகங்களில் 18 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களினால் 16 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.