.webp)
உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை முதல் தடவையாக 04 இலட்சம் ரூபாவை கடந்துள்ளது.
24 கரட் தங்கம் ஒரு பவுன் 410,000 ரூபாவாக அமைந்துள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 15,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுன் இன்று(17) 3,79200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 4,373 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது.
வருடத்தின் ஆரம்பத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,640 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
அமெரிக்காவில் தற்போது நிலவும் அரசு முடக்கம் மற்றும் அமெரிக்க டொலரின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
டொலரின் வீழ்ச்சியால் மக்கள் டொலரை கைவிட்டு அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்வதாகவும் பெறுமதியான உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவி பணிப்பாளர் இந்திக பண்டார குறிப்பிட்டார்.
அமெரிக்க வங்கியின் வட்டி வீதம் குறைவடைந்துள்ளதால் நிலையான வைப்புகளிலுள்ள பணத்தை மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதாலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2025 ஆம் ஆண்டில் 50 வீதத்தால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
உலகின் பல நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்த வர்த்தக வரியை தொடர்ந்தே கடந்த ஏப்ரல் மாதம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.