குற்றச்செயல்களில் ஈடுபடும் S.F இந்திக கைது

குற்றச்செயல்களில் ஈடுபடும் S.F இந்திக கைது

by Staff Writer 17-10-2025 | 7:10 PM

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் லொக்கு பெட்டியின் உதவியாளரான S.F இந்திக எனும் நபர் ஹூங்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ரி 56 துப்பாக்கி, 60 துப்பாக்கி ரவைகள், 02 மெகஸின்கள் ஆகியனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த தோட்டாக்களின் இலக்கங்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.