.webp)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னிஆரச்சியை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று(17) உத்தரவிட்டார்.
28 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியுள்ளதாக தெரிவித்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் சந்தேகநபரான நெவில் வன்னிஆரச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.