.webp)
10 கிலோவிற்கும் அதிக குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதான குறித்த இந்தியப் பிரஜை தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இன்று காலை 07 மணியளவில் நாட்டுக்கு வருகைதந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூட்சுமமான முறையில் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
அதன் பெறுமதி 107.5 மில்லியன் ரூபா என இலங்கை சுங்கம் தெரிவித்தது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் பொருத்தப்பட்ட புதிய ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் குறித்த குஷ் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.