.webp)
Colombo (News 1st) 2025 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று(03) நள்ளிரவு வௌியிடப்பட்டன.
www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களுக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 307,951 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இதனிடையே தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
51,969 பரீட்சார்த்திகள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளை பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டகளில் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்காக 134 புள்ளிகள் வெட்டுப்புள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்காக நுவரெலியா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளியாக 132 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார், திருகோணமலை, புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூலமான பாடசாலைக்களுக்கான வெட்டுப்புள்ளியாக 131 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.