மேல் நீதிமன்றுக்கு புதிதாக 18 நீதிபதிகள் நியமனம்

by Staff Writer 03-09-2025 | 6:44 PM

Colombo (News 1st) மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அனு குமார திசாநாயக்க நியமனக் கடிதங்களை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(03) பிற்பகல் வழங்கினார்.

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி ஒருவரும் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111ஆவது அரசியலமைப்பின் (2)ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக S.S.K.விதான, A.M.I.S.அத்தநாயக்க, A.M.M.ரியால், T.B.முதுங்கொடுவ, S.P.H.M.S.ஹேரத், J.கஜனிதீபாலன்,   டி.எம்.டி.சி.பண்டார, எச்.எம்.பி.ஆர்.விஜேரத்ன, டி.எம்.ஏ.செனவிரத்ன, A.A.ஆனந்தராஜா, G.N.பெரேரா, A.ஜுடேசன், டபிள்யூ.கே.டி.எஸ்.வீரதுங்க,  ஆர்.பி.எம்.டி.ஆர்.வெலிகொடபிடிய, கே.டி.என்.வி.லங்காபுர, டி.எம்.ஆர்.டி.திசாநாயக்க, M.I.M.ரிஸ்வி, A.ஜெயலக்ஷி டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதித்துறை சேவை ஆணையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டி.எம்.டி.சி.பண்டார, சிரேஷ்ட அரச சட்டத்தரணி A.ஜெயலக்ஷி டி சில்வா மற்றும் A.A.ஆனந்தராஜா மற்றும் கே.டி.என்.வி.லங்காபுர ஆகியோரும் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக இன்று நியமிக்கப்பட்டனர்.