.webp)
Colombo (News 1st) இத்தாலி வௌிவிவகாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதியமைச்சர் Maria Tripodi இன்று(03) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பிரதியமைச்சர் நாளை மறுதினம்(05) வரை நாட்டில் தங்கியிருப்பார்.
10 வருடங்களின் பின்னர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள உயர்மட்ட அதிகாரி இவர் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, வௌிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை Maria Tripodi சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அரசியல் ஆலோசனை பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவுள்ளது.