முன்னாள் ஜனாதிபதி ரணில் CID-யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க CID-யில் முன்னிலை

by Staff Writer 22-08-2025 | 10:03 AM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று(22) முன்னிலையாகியுள்ளார்.

அரச நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தனிப்பட்ட வௌிநாட்டு பயணங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

2023 செப்டம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் குறித்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அந்த விஜயத்தில் மேலும் 10 பேர் பங்குபற்றியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சான்ட்ரா பெரேரா ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.