தபால் திணைக்களத்தின் அதிரடி அறிவித்தல்

இன்று(22) கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் - தபால் திணைக்களம்

by Chandrasekaram Chandravadani 22-08-2025 | 10:32 AM

Colombo (News 1st) இன்றைய தினம்(22) கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்களை சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதி நடவடிக்கை எடுக்க நேரிடுமென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நேற்று இந்த விடயம் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் சமீஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று கடமைக்கு சமுகமளிக்காத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நிதி விடுவிக்கப்பட மாட்டாது என திறைசேரி தெரிவித்துள்ளதாகவும் தபால் மாஅதிபரால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று(22) ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.

மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் கைரேகை பதிவு உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.