ஒன்றிணைந்த நேர அட்டவணையில் பஸ் சேவைகள்

ஒன்றிணைந்த நேர அட்டவணையில் பஸ் சேவைகள்

by Staff Writer 22-08-2025 | 12:02 PM

Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை(25) நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டம் கொழும்பு - புத்தளம் மார்க்கத்தில் ஆரம்பிக்கப்படுமென அதன் தலைவர் பொறியியலாளர் பீ.ஏ.சந்திரபால தெரிவித்துள்ளார்

கொழும்பு - யாழ்ப்பாணம், கொழும்பு - மன்னார், கொழும்பு - குளியாபிட்டி ஆகிய மார்க்கங்களிலும் கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் வீதிகளிலும் ஒன்றிணைந்த நேர அட்டவணையில் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகிய இரு நிறுவனங்களால் பொதுமக்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்ட சேவைகளை ஒன்றிணைத்து ஒரே கால அட்டவணையில் சேவையில் ஈடுபடுத்த இதனூடாக நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ.ஏ.சந்திரபால தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் முறையான நேர அட்டவணைக்கமைய பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தேவையான நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.